Skip to main content

Posts

Showing posts from 2018

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்

அழகியசிங்கர்

இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன்.  த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன்  அவர்கள் பேசினார்.  ஆனால் கூட்டம் 6 மணிக்கு ஆரம்பித்து ஏழரை மணிக்கு முடிக்க வேண்டும்.  கிட்டத்தட்ட 7 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பிக்கும்படி ஆயிற்று.   ரொம்ப நாட்களுக்குப் பிறகு நானோ டுவீஸ்ட் காரை ஓட்டிக் கொண்டு போனதால் இந்த விளைவு.  சமீபத்தில் காரை சர்வீஸ் கொடுத்திருந்தேன்.  சர்வீஸ் போய் வந்தபிறகும் நான் காரை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை.  சர்வீஸ் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை.  இது என் தப்பு.  வண்டியை எடுத்துக்கொண்டு போனபிறகுதான் பெற்றோல் ஒரு சொட்டு கூட இல்லை என்று.  கூடவே நண்பர்களான வைதீஸ்வரனையும், ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வந்தேன்.  வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு மாற்றினேன்.  ரொம்ப கடுமையாக இருந்தது.  எளிதாக மாறக்கூடிய கியர் மாறத் தயாராயில்லை.  இந்தச் சிரமத்துடன் வண்டியை சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டுபோனேன்.  போய்ச் சேருவதற்குள்  6.45 ஆகிவிட்டது.  என்னுடன் கூட்…

வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு

வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இலக்கியக் கூட்டத்திற்கு எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.         கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.அழகியசிங்கர்நகுலன் மதியம் டீ குடிக்க வந்தார்....

அழகியசிங்கர்நானும் நண்பரும் மதியம் அசோக்நகர் சரவணபவன் ஓட்டலில் காப்பி குடிக்கச் சென்றோம்.  அப்போது ஒரு வயதானவரைப் பார்த்து அசந்து விட்டேன்.  எனக்கு உடனே ஒருவர்தான் ஞாபகத்திற்கு வந்தார்.  நகுலன்.  அவர் எப்படி இங்கே வந்தார்.  அவர்தான் எப்போதோ போய்விட்டாரே என்று தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை.  நகுலன் மாதிரி அந்த வயதானவர் தோற்றம் அளித்தார். பக்கத்தில் என்னுடன் இருந்த நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.  'இவரைப் பார்த்தால் நகுலன் மாதிரி தெரியவில்லையா?' என்று. நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.  நகுலன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், பிரமிள், ஐராவதம், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ் என்று பலர் இறந்து விட்டார்கள்.  ஆனால் அவர்கள் அனைவரும் என் நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.   அந்தப் பெரியவரைப் பார்த்தவுடன் நகுலன் மாதிரி இருந்தார்.   அவரைப் பார்த்து கேட்டேன் : "உங்கள் பெயர் டி கே துரைசாமியா?ýý "இல்லை. மோகன்." என்னால் நம்ப முடியவில்லை.  எப்படி இவர் நகுலன் மாதிரி தோற்றம் அளிக்கிறார் என்று. "ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டுமா?" என்று கேட்டேன்.  "சரி," என்றார்.  "…

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 2

அழகியசிங்கர்என் அறையில் என் கண் முன்னால் பல புத்தகங்கள் இருக்கின்றன.  எந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்தாலும் படித்துக்கொண்டே போகலாம்.  ஆனால் எதாவது ஒன்றை எடுத்து கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலும் பின் அதை வைத்துவிட்டு வேறு எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றும்.  மெதுவாகப் படிக்கலாமென்று விட்டுவிடத் தோன்றும். ஆனால் ஒரு வண்டியில் வெகு தூரம் செல்லும்போது எதாவது புத்தகங்களை பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று தோன்றுகிறது.  மேலும் இரவு நேரங்களில் இதுமாதிரியான வண்டிகளில் பயணம் செய்யும்போது தூக்கம் சிறிது கூட வருவதில்லை.  நம் பக்கத்தில் உள்ள பயணிகள் இதுமாதிரியான யாத்திரிகளில் பழக்கமானவர்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.   அது போராகத் தோன்றுகிறது.  அதனால் இந்த முறை இரவு பயணத்தை தவிர்த்துவிட்டு பகல் பயணத்தை ஏற்படுத்திக்கொண்டேன். இந்தப் பயணத்தில் போகும்போதும் வரும்போதும் நான் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்துக்கொண்டே போனேன்.  நான் எடுத்துக்கொண்ட புத்தகங்களைப் படித்துவிட வேண்டுமென்ற துடிப்பும் என்னிடம் இருந்தது. 'அது ஒரு நோன்புக்கால…

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 1

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 1


அழகியசிங்கர்
இந்த முறை நானும் மனைவியும் மயிலாடுதுறைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் பிடித்துப் போனோம்.  ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பகல் நேரத்தில் வண்டியில் போவதில் சில சௌகரியங்கள் உண்டு.  வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு போகலாம்.  பல காட்சிகள் மனதில் நிழலாடும்.  நமக்குத் தெரியாத வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கலாம்.  பலர் பேச மாட்டார்கள். சிலர் புன்னகை புரிவார்கள்.  நான் ஒவ்வொரு முறையும் பகல் நேரத்தில் போகும்போது புத்தகங்கள், பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு போய் படிப்பேன். இந்த முறையும் அப்படித்தான்.   முன்பெல்லாம் அதிகமாகக் கையில் எடுத்துக்கொண்டு போய் படிக்காமல் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன்.  அப்படியெல்லாம் ஆகக் கூடாது என்று எப்படியும் படிக்கத் தீர்மானித்தேன். விருட்சம் 105வது இதழுக்கு அனுப்பிய கதைகளையும் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு போனேன் படிக்க.   முதலில் அந்திமழை மார்ச்சு மாதம் இதழை எடுத்துக்கொண்டு போனேன் (உண்மையில் நான் கிளம்பிய அவசரத்தில் இன்னும் சில பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம்). இப் பத்திரிகையில் üவாச…

ஸ்கூட்டருக்கு மாறிவிட்டேன்......

அழகியசிங்கர்ஆரம்பத்தில் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கினேன்.  அதை வைத்துக்கொண்டு சென்னையில் எல்லா இடங்களுக்கும் சுற்றுவேன். அலட்சியமாக மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்குச் செல்வேன். மயிலாப்பூரில் உள்ள நண்பருக்கு என் மீது ஆச்சரியம். திருவல்லிக்கேணியில் உள்ள இலக்கிய நண்பர்களைப் பார்ப்பேன்.  உண்மையில் நான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்வதில்தான் ஆர்வம்.   இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பேன்.  என்னால் முடிகிறது என்ற சந்தோஷம். ஒரு முறை என் மனைவியை பின்னால் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போனேன்.  ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கிய போது மனைவி கீழே விழுந்து விட்டாள்.  எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.  சைக்கிள் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் ஒரு லாம்பி ஸ்கூட்டர் வாங்கினேன்.  உண்மையில் எனக்கு லாம்பி ஸ்கூட்டர் வாங்கப் பிடிக்கவில்லை.  அப்போதெல்லாம் பஜாஜ் ஸ்கூட்டர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.  வெஸ்பா கூட.  அதனால் லாம்பி வாங்கினேன்.  பல ஆண்டுகள் லாம்பி வண்டியில் பறந்து கொண்டிருந்தேன்.  ஒரு முறை ஒரு சைக்கிள் எதிரில் வந்த லாம்பியை ஒரு தட்டுத் தட்டியது.  அவ்வளவுதான் லாம்பி கோணிக்கொண்டது.�…

சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்.....

சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்.....


அழகியசிங்கர்
இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் தோன்றும்  எனக்குப் புத்தி எதாவது குழம்பிப் போயிருப்பதாக. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.   சி சு செல்லப்பா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார்.  எப்படி இரண்டாவது நாவல் எழுதியிருப்பதாகச் சொல்ல முடியும்.  அவர் எழுதிய ஒரே நாவல் சுதந்திர தாகம் என்றுதான்  நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை.
சுதந்திரதாகம் என்ற நாவலை எழுதிய சி சு செல்லப்பா அவர் முயற்சியில் புத்தகமாகவும் கொண்டு வந்து விட்டார்.  80 வயதில் அவர் செய்த சாதனையாகத்தான் இதை  நான் நினைக்கிறேன்.  தானே நாவல் எழுதி தானே புத்தகமாகப் பதிப்பித்த துணிச்சல் சி சு செல்லப்பாவைத் தவிர யாருக்கும் வராது.   அதாவது அவருடைய 80வது வயதில்.  தமிழில் எந்த எழுத்தாளராவது  இது மாதிரி துணிச்சலாக இருந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.   ஏன் இந்தியா அளவில் எந்த எழுத்தாளராவது உண்டா?  உங்களுக்கு விபரம் தெரிந்தால் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.   சி சு செ முயற்சியில் எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையே சுத…

அன்று மார்ச்சு ஒன்றாம் தேதி..

அழகியசிங்கர்


நான் அஸ்தினாபுரம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  2008ஆம் ஆண்டு.  அன்று சனிக்கிழமை.   மார்ச்சு ஒன்றாம் தேதி.  காலை நேரம்.  என் நண்பர்களிடமிருந்து போன் வந்தது.  'ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.' செய்தியைக் கேட்டவுடன் அதிர்ந்து விட்டேன்.  என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்டு விடுவார் என்பதை சற்றும் நம்பமுடியவில்லை. என் நண்பர்கள் 'உடனே கிளம்பி வரும்படி' சொன்னார்கள்.  நான் வங்கி மேலாளரிடம் சென்று, üஎனக்குத் தெரிந்தவர் திடீரென்று இறந்து விட்டார், நான் கிளம்ப வேண்டும்.ý என்றேன்.  மேலாளர் கொஞ்சமும் இரக்கமில்லாமல், 'உங்களை இப்போது அனுப்ப முடியாது. வேலையெல்லாம் முடித்துவிட்டுப் போங்கள்,' என்றார்.  நான் சொன்ன விஷயத்தின் மீது அவருக்குத் துளிக்கூட இரக்கமே இல்லை.  என்ன செய்வது என்று புரியவில்லை. பின் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்.  நான் அங்கிருந்து கிளம்பிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.  பரபரப்பாக இருந்தேன்.  ஒரு மனிதன் எந்த இடிமாதிரி செய்தி கேட்டாலும் பதட்டப்படாமல் இருக்கப் பழக்கமாகியிருக்க வே…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 84

அழகியசிங்கர்  

அமர்ந்திருக்கும் நெடுங்காலம்

ஸ்ரீஷங்கர்நீ என்பது
எனக்கு
துலங்கும்
வெம்மைமிகு தாபச் சொற்கள்
என்னில் புத்துயிர்களை ஈணுவது

நான் என்பது உனக்கு
உனது நீர்மையில்
அடியுறக்கம் கொள்ள அனுமதித்திருக்கும் மீன்

சிலவேளை
சிறு சலனம்கூட அற்ற
பூட்டிய கதவுகளுக்குக்கீழ்
அமர்ந்திருக்கும் என் நெடுங்காலமும்தான் நீ

நானென்பது
உன் விருப்பத்துக்கென குற்றங்கள் புரிய
நீ நியமித்திருக்கும் ஒப்பந்தக்காரன்

எனக்கு நீ
உறங்கும் என் குறியின்மேல்
அலைந்து கொண்டிருக்கும் பூரான்
அதன் துளைக்குள் பரபரத்து நுழைவது

மேலும்
நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்

நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு

நீயோ
என்னைத் தெரிவிக்கமுடியாதபோது
தரித்தயென் ஆடைகளிலிருந்து
கழற்றிவிட்டுக்கொள்ளும் முழுப்பொத்தான்களும்தான்

நானுனக்கென்பது
உனை மீட்டெடுக்கும் கனவுகளின்மேல் நீ
உருவாக்கிக்கொண்டிருக்கும்
சித்திரத்தய்யல்

நீயெனக்கென்பது
உன்னோடு கிடந்து
நாம் இல்லாது போக விரும்பும் புலன்களின் காமத்தை
ஆராதிப்பவள்
மற்றும்
எனது வீடு பேறு


நன்றி : திருமார்புவல்லி - ஸ்ரீஷங்க…

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - பகுதி 2

அழகியசிங்கர்நேற்று கடற்கரை மத்தவிலாச அங்கதம் பேட்டியை வெளியிட்டிருந்தேன். அது முதல் பகுதி.  இதைக் குறிப்பிட மறந்து விட்டேன்.  இதோ இரண்டாவது பகுதியைப் பாருங்கள்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

அழகியசிங்கர்09.02.2018 அனறு பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் 15வதாக கடற்கரை அவர்களைப் பேட்டி எடுத்தேன்.  அமைதியாக அவர் அளித்தப் பதிலை கேட்டு ரசிக்கவும்.  சமீபத்தில் பாரதி விஜயம் என்ற தலைப்பில் மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் கொண்ட புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.1040 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.

நடிகை ஸ்ரீ தேவியின் மரணம்

அழகியசிங்கர்நடிகை ஸ்ரீ தேவியின் மரணத்தை அறிந்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.  ஸ்ரீதேவி என்ற நடிகை நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்தவன்.  அவருக்குக் குழந்தைத் தனமான ஒரு முகம். அட்டகாசமான நடிப்புத் திறன் கொண்டவர்.  படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் சில தினங்கள் அவர் ஞாபகம் இருந்துகொண்டு இருக்கும்.  நம்ம் வீட்டில் உள்ள ஒரு பெண்மணி என்று தோன்றும். ரஜனியுடனும் கமல்ஹாசனுடன் அவர் நடித்த 16 வயதினிலே என்ற படத்தை என்னால் மறக்க முடியாது.  இப்படி கவர்ச்சிகரமான ஒரு தமிழ் நடிகை மும்பையில் ஹிந்திப் படங்களில் நடிக்கப் போய்விட்டாரே என்று தோன்றும்.  பின்பு அவர் மும்பையிலேயே திருமணம் செய்துகொண்டு இருந்துவிட்டார் என்ற செய்தி எட்டியபோது, அந்த நடிகையைப் பற்றிய கவனம் சற்று கலைந்து போயிற்று.  நேற்று இரவு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.  54 வயதுதான். 
மாரடைப்பால் ஏற்படும் மரணம் குறித்து என் சிந்தனை குதித்து ஓடிற்று. நான் பந்தநல்லுரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அலுவலகத்தில் பணிபுரியும் காஷ÷யர் ஒருநாள் காலையில் ஒரு மாதிரியாக இருந்தார். கிராமத்தில் …

ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.

விருட்சம் கவிதைகள் தொகுதி 1

அழகியசிங்கர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் விருட்சம் கவிதைகள் தொகுதி 1 என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.  94 படைப்பாளிகளின தொகுப்பு நூல் இது.  புதிதாக கவிதை எழுத விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன்.  230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120.  ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.  வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9444113205
 எஸ் வைத்தியநாதன் என்பவர் எழுதிய நாற்காலி என்ற கவிதையை வாசிக்கவும்.

வேண்டும் சமயம் சென்றமர்வேன்
புத்தகங்களை வைப்பேன்
உடைகளை வைத்ததுண்டு
உயரமெட்ட உபயோகித்ததுண்டு
காணாதது போல்
இருந்ததும் உண்டு
கிடந்து கட்டிலில் கால் வைத்துக்கொள்வேன்
சமீபத்தில்
நாற்காலியாகிப் போனேன்

ஓர் உரையாடல்

அழகியசிங்கர்
மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறார் அழகியசிங்கர்.  உண்மையில் இந்தக் கூட்டத்தின் நோக்கம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.  ஆனால் பொதுவாக புத்தகங்களைப் பற்றித்தான் பேச வேண்டும்.  அவர் வீட்டில் பால்கனியில் காத்துக்கொண்டிருக்கிறார்.  வழக்கம்போல் அவரைப் பார்க்க ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.  காலிங் பெல்லை அடித்துவிட்டு வாசலில் நிற்கிறார்கள்.  "வாருங்கள் வாருங்கள்.." என்று வரவேற்கிறார் அழகியசிங்கர். மூவரும் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள்.  மோகினி : உங்கள் மனைவி எங்கே? அழகியசிங்கர் : பெண் வீட்டிற்குப் போயிருக்கிறாள். ஜெகன் : கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்? அழகியசிங்கர் : இந்த அரசியலே எனக்குப் புரியவில்லை.  மதுரையில் நடந்த கூட்டத்தைப் பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?  இதெல்லாம் யார் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. மோகினி : நீங்கள் நடத்திற இலக்கியக் கூட்டம் என்று நினைத்தீரா? அழகியசிங்கர் : நான் நடத்தும் இலக்கியக் கூட்டத்திற்கு 20 பேர்கள் கூட வரு…

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசிய பேச்சின் மூன்றாம் பகுதி

அழகியசிங்கர்
கிட்டத்தட்ட முக்கயமான கு அழகிரிசாமியின் சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன.  முதல் பகுதி இரண்டாம் பகுதிகளைப் பார்த்து ரசித்திருப்பீர்கள்.  இதோ மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியும் அளிக்கிறேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் உற்சாகமடைவேன்.

கு அழகிரிசாமியும் நானும் - 2

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசிய பேச்சின் இரண்டாவது பகுதி


அழகியசிங்கர்

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன் பேசிய பேச்சின் முதல் பகுதி

அழகியசிங்கர்கிட்டத்தட்ட முக்கயமான சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன.  முதல் பகுதியை இன்று அளிக்கிறேன்.  உங்கள் கருத்துக்களைப் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டம்

அழகியசிங்கர்


இது வரை 8 கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  முதலில் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் திரூப்பூர் கிருஷ்ணன் தலமையில் ஜøன் மாதம் 2017 ஆண்டு இக் கூட்டத்தைத் துவக்கினேன்.  திருப்பூர் கிருஷ்ணன்தான் இதுமாதிரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்.  அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தாளரைக் குறித்தும்  கூட்டங்களை நடத்தி வருகிறேன்.  இதுவரை நடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் எனக்குத் திருப்தியை அளித்து உள்ளன. எல்லாவற்றையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துகொண்டு வருகிறேன்.  
போன மாதம் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ராகஷ் பற்றி பேசினார். இதோ இந்த மாதம் 17ஆம் தேதி கல்யாணராமன் (பேராசிரியர்) கு அழகிரிசாமியைப் பற்றி..
இக் கூட்டங்களில் இரண்டு விதமான போக்குகளை நான் காண்கிறேன். ஒன்று : ஒரு எழுத்தாளரை நன்கு அறிந்துகொண்டு அவருடன் பழகிய நட்புடன் அவர் படைப்புகளைக் குறித்தும், அவரைக் குறித்தும் பேசுவது.  இன்னொரு போக்கு அந்த எழுத்தாளரையே தெரியாமல் அவர் படைப்புகளை மட்டும் படித்துவிட்டுப் பேசுவது.  கல்யாரணராமன் அழகிரிசாமியின் கதைகளை மட்டும் படித்துவிட்டுப் பேசினார்.   அந்தக் கதைகளை முழுக்க முழுக்கப் படித்துவிட்டு ஞாபகத்தில…

என் கதைக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு

அழகியசிங்கர்
தினமணியைப் படித்துக்கொண்டு வரும்போது üதினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியைýப் பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன்.  எப்போதும் நான் கதைகள் எழுதுவது என்பது குறைவாகத்தான் இருக்கும்.  கதை எழுது என்று எந்தப் பத்திரிகைக்காரரும் என்னைக் கேட்பதில்லை. ஏன் யாரையும் கேட்பதில்லை?   என் பத்திரிகையில் நான் எழுதுவது தவிர.  எந்தப் பத்திரிகையிலும் நான் கதை அனுப்பினால் கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருக்கும்.  பத்திரிகைகாரர்களைக் குறை சொல்ல முடியாது.  ஏகப்பட்ட கதைகள் அவர்களுக்கு வரும்.  அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களிடையே குழப்பமாக இருக்கும்.  ஏன் போட்டியாகக் கூட இருக்கும்.  ஒருமுறை அசோகமித்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அடிக்கடி என்னிடம், üமற்றப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புங்கள்,ý என்று கூறிக்கொண்டிருப்பார்.  üயாரும் கண்டுக்க மாட்டாங்க, சார்,ý என்பேன் நான்.  ஏனென்றால் எல்லாப் பத்திரிகைகளிலும் எனக்குத் தெரிந்தவர்கள் இருப்பார்கள்.  ஆனால் அவர்களுக்கு என் கதைகளை அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். எனக்கும் சங்கடம்.  அவர்களுக்கும் சங்கடம் என்பதுதான…

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 33

கு அழகிரிசாமியும்  நானும்


சிறப்புரை :  கல்யாணராமன்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    4 லேடீஸ் தேசிகா தெரு
    ஆறாவது தளம்
    மயிலாப்பூர்
    சென்னை 600 004
(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)


தேதி17.02.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு :   சமீபத்தில் ஆரஞ்சாயணம் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகமாக ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.  பேராசிரியர், விமர்சகர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

குவிகம் இருப்பிடத்தில் நடந்த கூட்டம்

அழகியசிங்கர்குவிகம் இருப்பிடத்தில் நேற்று நண்பர்களைச் சந்தித்தேன். இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பது தெரியும்.  அதுமாதிரியே வந்திருந்தார்கள்.  
கலந்து கொண்டவர்களில் ஒருவர், 'உங்களுக்கு கவிதையா கதையா எதில் விருப்பம்?' என்ற கேள்வி கேட்டார்.  'முதலில் எல்லோரும் கவிதைதான் எழுதுவார்கள்.  அதன்பின்தான் கதை எழுத ஆரம்பிப்பார்கள்.  பின் கட்டுரைகள் எழுதுவார்கள்..நாவலும் எழுதுவார்கள்,' என்றேன்.  'ஆனால் சில எழுத்தாளர்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்?' என்றேன்.  
இது எல்லோரும் சேர்ந்து பேசுகிற கூட்டம்.  'ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்யும்போது, எல்லோர் முன்னும் அதை மோசமாக விமர்சனம் செய்யாதீர்கள்.  உங்கள் கருத்து உங்களுக்கு மட்டும்தான் உண்மை.  அதைத் தெரிவிக்கும்போது மற்றவர்களிடம் வைரஸ் மாதிரி பரவி புத்தகம் வாங்குபவர்கள் வாங்காமல் இருந்து விடுவார்கள்,' என்றேன்.  நான் சொன்னதை அங்குக் கூடியிருந்த நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2


பா ராகவன் பேட்டி அளிக்கிறார்


நேற்று பா ராகவன் பேட்டியில் முதல் பகுதி வெளியிட்டேன்.  இப்போது இரண்டாவது பகுதி.  கேள்வி கேட்பவரை விட பதில் சொல்பவர்தான் முக்கியமானவர்.  அந்த விதத்தில் ராகவன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.  அவருக்கு என் வாழ்த்துகள்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 1

பா ராகவன் பேட்டி அளிக்கிறார்

இந்தத் தலைப்பில் இதுவரை பா ராகவனையும் சேர்த்து 14  பேர்களைப் பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.  சமீபத்தில் நான் ராகவன் வீட்டிற்குச் சென்றேன்.  உண்மையில் அமேசான் கின்டலில் என் புத்தகத்தை மின்னூலாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ளச் சென்றேன். அப்போது பத்து கேள்விகள் பத்து பதில்களுக்கான பேட்டியும் எடுத்தேன்.

தயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்

அழகியசிங்கர்


தயாரிப்புக் கவிஞர் ஒருவர் தயாரிப்பு இல்லாத கவிஞரை அசோக்நகரில் உள்ள சரவணா ஹோட்டலில் சந்தித்துவிட்டார்.  தயாரிப்பு இல்லாத கவிஞர் எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க  ஆரம்பித்துவிட்டார்.   ஏனென்றால் அவரைக் கண்டாலே த இ கவிஞருக்குப் பிடிக்கவில்லை.   கவிதையே எழுதத் தெரியாது ஆனால் கவிதை எழுதுவதாக பாவலா பண்ணுகிறார் என்ற நினைப்பு த. இ.7 கவிஞருக்கு.  தயாரிப்புக் கவிஞருக்கோ யார்யாரெல்லாசூமோ கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறார்கள்.  இவர் அப்பாவியாக இருக்கிறாரே என்ற நினைப்பு.
"வணக்கம்.  என் புதிய கவிதைப் புத்தகத்திற்கு உங்களிடம்தான் முன்னுரை வாங்க நினைத்தேன்.." "ஐய்யய்யோ..எனக்கு அந்தத் தகுதியே கிடையாது," என்றார் த. இ. கவிஞர். "ஏன் தகுதி இல்லை.  நானும் நீங்களும்தான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தோம்.  இதோ நான் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  ஆனால் நீங்கள் ஒன்றுகூட கொண்டு வரவில்லை.." "நான் வேலையில் மூழ்கிவிட்டேன்.  வீட்டுப் பிரச்சினை வேறு.. எங்கே கவிதை எழுதுவது.." "நீங்கள் ஒன்றிரண்டு எழுதினாலும் நன்றாக எழுதுவீர்கள்…

எதிர்பாராத சந்திப்பு

அழகியசிங்கர்என்னுடைய முழு சிறுகதைத் தொகுதி வாங்குபவர்களுக்கு சென்னையில் இருந்தால் அவர்கள் வீட்டிற்குச் சென்று புத்தகம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.   அப்படி சிலருக்குக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன்.  ஞாயிற்றுக்கிழமை அன்று மடிப்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் என் அலுவலக நண்பர் சுரேஷ் அவர்களிடம் என் புத்தகம் ஒன்றை கொடுக்கச் சென்றேன்.  அவர்கள் வீட்டு மாடிப்படிக்கட்டிற்குப் போகும்போது ஜாக்கிரதையாகப் போக வேண்டும். தடுமாறி விழ தரை ஒரு விதமாக ஏமாற்றும்.   அவரிடமும் புத்தகம் கொடுத்துவிட்டு ஷண்முக சுந்தரம் என்ற நண்பரை ஆதம்பாக்கத்தில் சந்தித்து கதைப் புத்தகம் கொடுக்கச் சென்றேன்.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார் ஷண்முக சுந்தரம்.  ஒரே ஆச்சரியம்.  ஏகப்பட்டப் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார். பளீரென்ற விளக்குகள் வெளிச்சத்தில்.  இரும்பு அலமாரிகளில் பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள்..  வாடகை நூல் நிலையம் வைத்து நடத்துகிறார்.  அலுவலகம் போய்விட்டு வந்து மீதி நேரத்தில் நடத்துகிறார். எல்லோரும் வந்திருந்து புத்தகங்களை எடுக்கிறார்களா என்று க…

ரோஜா நிறச் சட்டை

அழகியசிங்கர்
என்னுடைய சிறுகதைத் தொகுதியான ரோஜா நிறச் சட்டை மின்னூலாக வந்துள்ளது.  ஒரு விதத்தில் பா ராகவன் தூண்டுதல் இப் புத்தகம் வர உதவியது. மேலும் என் நண்பர் கிருபானந்தன் இப் புத்தகத்தை மின்னூலாக மாற்ற உதவி செய்தார்.  ஏற்கனவே நேர் பக்கம் என்ற கட்டுரைத் தொகுதி மின்னூலாக உள்ளது. AMAZONKINDLE ல் KDPAMAZON. COM  போய்ப் பார்க்கவும்.