Skip to main content

ஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்


அழகியசிங்கர்



இந்த மாதம் நாலாவது சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பும், குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பும் இரு இலக்கியக் கூட்டங்களை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஏற்பாடு செய்தன. இரண்டு அமைப்புகளும் சேர்ந்து கடந்த இரண்டு கூட்டங்கள் நடத்துகின்றன.  இலக்கியச் சிதனை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாக இலக்கியச் சிந்தனை மாதாந்திர கூட்டத்தை சரிவர செய்ய இயலவில்லை.  பொதுவாக இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை.  சிலசமயம் கூட்டத்தில் பேச வருபவரும் அதை ஏற்பாடு செய்தவர் மட்டும் இருப்பார்கள். அதனால் குவிகம் வாசக சாலை மூலம் ஏற்பாடு செய்வதால் இன்னும் சிலர் கூடுதலாக கூட்டத்திற்கு வரலாம்.

கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் முழு மூச்சாக இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தீவிரமாக இயங்குபவர்கள்.  இதுவரை வெற்றிகரமாக 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியவர்கள்.  அவர்கள் முயற்சியில் இலக்கியச் சிந்தனை அமைப்பும். குவிகமும் சேர்ந்து கூட்டங்களை நடத்தத் துவங்கி உள்ளன.  முதலில் அந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி இரண்டு கூட்டங்களை ஒரே சமயத்தில் நடத்துவதால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் கூட்டங்களை முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை.  

சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் இலக்கியச் சிந்தனை சார்பில்  நாராயணியம் பற்றி சுந்தரராஜனும், குவிகம் சார்பில் லா ச ராமமிருதத்தின் அபிதா என்ற நாவலைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் நடந்தது. நேரம் போனதே தெரியவில்லை.  நாராயணியம் பற்றி பேசிய சுந்தரராஜன் மனதைத் தொடும்படி பேசினார்.   9 மணிக்குத்தான் கூட்டங்கள் முடிந்தன.  லாசராவின் அபிதா என்ற நாவலைப் படிதத்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.  
தொடர்ந்து இரண்டு அமைப்புகளும் செயல்பட என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

Comments