Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ......



சுகுமாரன்



பூனை...

மனிதர்கள் தவிர

மற்ற பிராணிகளுடன்

பழக்கமில்லை எனக்கு
எனினும்


உள்ளங்கைச் சூடுபோல

மாறாத வெதுவெதுப்புள்ள

பூனைகளின் சகவாசம்

சமீப காலமாய்ப் பழக்கமாச்சு

மயிலிறகை அடை வைத்த பருவத்தில்

கால் குலுக்கக் கை நீட்டி

விரல் கிழித்த பூனையால்

'மியாவ்' என்று நீண்ட நாள் பயந்தேன்

இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்

வடுவாக மிஞ்சிய இப்போது

பூனைப்பயம் பொய்த்துப் போச்சு

வீடு மாற்றியபோது புரிந்தது -

நன்றியின் சொரூபம்

நாய்களல்ல

பூனைகள்

நாய்கள்

மாநிதரைச் சார்ந்தவை

சுதந்திரமற்றவை

எப்போதோ

சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை

இன்னும் உறிஞ்சியபடி

காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது

பூனைகள்

வீடுகளைச் சார்ந்தவை

சுதந்திரமானவை


நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு

பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்

உலர்ந்த துணியில் தெறித்த

சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்

பூனைகளுடன் இப்போது

பகையில்லை எனக்கு

உடல் சுத்தம்

சூழ்நிலைப் பராமரிப்பு

ரசனையுள்ள திருட்டு

காதல்காலக் கதறல்

பொது இடங்களில் நாசூக்கு - என்று

பூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல

எனினும்

என்னைக் கவரக்

காரணங்கள் இரண்டு

ஒன்று:

எனக்குத்

கடவுளுக்கும்

வாகனமாய்ப் பூனை இல்லை

இரண்டு:

பூனை கண் மூடினால்

இருண்டுவிடும் உலகம்

நானும்

கண்மூடுகிறேன்

"மியாவ்"

o

Comments