Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்




11


விளையாடும் பூனைக்குட்டி


க நா சு


மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்


குறுக்


கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத்


தாவி எழுந்து வெள்ளைப்


பந்தாக


உருண்டோடிக் கூர்நகம் காட்டி


மெலிந்து சிவந்த நாக்கால்


அழுக்குத் திரட்டித் தின்னும்


பூனைக்குட்டி -


என்னோடு விளையாடத் தயாராக


வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்


சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து


அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்


பார்க்கிறது. அப்போது நான்


சிலப்


பதிகாரம் படிந்திருந்து விட்டேன்


பின்னர்


நான் அதை விளையாட


'மியாவ் மியாவ் ஓடி வா'


என்று கூப்பிடும் போது நின்று


ஒய்யாரமாக ஒரு பார்வையை என்


மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்


அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே


அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது


பூனைக்குட்டி



(எழுத்து / ஏப்ரல் 1959)


Comments

க நா சு அவர்களின் பொய்த்தேவு, ஒருநாள்,, நாவல்களை வாசித்திருக்கிறேன். கவிதைகளை தொகுப்பாக வாசித்ததில்லை, தற்போது எங்கு கிடைக்கிறது, தேடி வாசிக்க மிகவும் ஆவலோடிருக்கிறேன், இந்தக் கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.