Skip to main content

Posts

திருவாசகமும் நானும் - ஒளிப்படம் 1

Recent posts

200 கூட்டங்கள் நடத்தி முடித்திருப்பேன்..

அழகியசிங்கர்
நான் இதுவரை 200 கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  1988ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் தொடங்கியதிலிருந்து கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  ஆனால் நான் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தவில்லை.  நான் பதவி உயர்வுப் பெற்று பந்தநல்லூர் என்ற ஊருக்குப் போனபின் கூட்டங்கள் நடத்தவில்லை.  ஏன் நான் திரும்பவும் சென்னை மாற்றல் ஆகி வந்தபிறகு திரும்பவும் கூட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறேன்.  கூட்டம் என்பது ஒரு இனிமையான பொழுதைக் கழிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.  அதற்கான முயற்சியைத்தான் செய்துகொண்டு வருகிறேன்.

கூட்டத்தில் பேசுபவரும், கூட்டத்திற்கு வருகை தருபவர்களையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  நாளை நடைபெறும் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம முக்கியப் பங்கு வகிக்கிறது.

அழகியசிங்கர்
நானும் நட்ராஜனனும் தினமும் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருப்போம்.  ஒரு நாள் அவர் திருவாசகத்தைப் பற்றிப் பேச அது குறித்து ஆழ்ந்தத் தேடல் அவரிடம் உருவாகியது.  உடனே நானும் என் புத்தக நூல் நிலையத்திலிருந்து திருவாசகப் புத்தகங்களைத் தேடினேன்.  சுவாமி சித்பவானந்தர் திருவசாகம் எனக்குக் கிடைத்தது. திருவாசகத்தை போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார்.  நடராஜன் போப் எழுதிய ஆங்கில பிரதியைப் படிக்க ஆரம்பித்தார்.  போப்பின் சிறப்பான மொழி ஆற்றலை அறிந்து நட்ராஜனுக்கு ஆச்சரியம். உண்மையில் பரவசம் அடைந்து விட்டார்.  பக்தி இலக்கியம் நம் வாழ்க்கைக்குத் தேவையா என்ற கேள்வியைக் கேட்டு அவரை மடக்குவேன்.  அவர் அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னை அடக்கி விடுவார். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் உரையாடலில் பலரும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

அழைப்பிதழைப் பார்க்கவும்

அழகியசிங்கர்
தொடர்ந்து விருட்சம் கூட்டம் மூன்றாவது சனிக்கிழமை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறேன். கூட்டத்திற்கு வந்திருந்து ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நன்றி. கூட்டத்தின் முக்கிய நோக்கம். ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறோம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. இதோ அழைப்பிதழ்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 30

திருவாசகமும் நானும்

சிறப்புரை : சந்தியா நட்ராஜன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
(4 லேடீஸ் தேசிகர் தெரு)
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
தேதி 21.10.2017 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6 மணிக்கு
பேசுவோர் குறிப்பு : தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர்
அனைவரும் வருக, அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 79

அழகியசிங்கர்  


அடகுக் கடை


பத்மஜா நாராயணன்எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகுவைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்றுவிட்ட ஒன்றை
அவள் எப்படி திருப்பிவைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
ஏதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக்கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்துவிடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்துகொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும்
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே!

நன்றி : தெரிவை - கவிதைகள் - பத்மஜா நாராயணன் - மொத்தப் பக்கங்கள் : 64 - வெளியீடு : டிசம்பர் 2013 - விலை : ரூ.50 - வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் - 6 முனுசாமி சாலை, மேற்கு கே கே நகர், சென்னை 600 078 - தொலைபேசி : 044 - 65157525


22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 7

அழகியசிங்கர்


பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தினால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  காசெட் ரிக்கார்டு ப்ளேயர் மூலம் தெற்கு மாட வீதி திருவல்லிக்கேணியில் நடந்த பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அப்படிப் பதிவு செய்யும்போது, சத்தமாக கார் ஓடும் சத்தம், ஆட்டோ சத்தம் என்று பல சத்தங்களும் பின் புலமாக பேச்சின் நடுவில் கேட்கும்.  உருப்படியாக இரண்டு கூட்டங்களின் ஆடியோவை அளித்து உள்ளேன்.  ஒன்று சுந்தர ராமசாமியின் பேச்சு.  இன்னொன்று தமிழவன் கூட்டத்தின் பேச்சு.
நான் நடத்திய கூட்டத்திலேயே சிறந்த முயற்சி அசோகமித்திரனின் இந்த ஒளி-ஒலி படம்தான்.  சிறப்பாக க்ளிக் ரவி படமெடுத்துக் கொடுத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.  8 பகுதிகளாக உள்ள இதில் 6 பகுதிகளை ஏற்கனவே உங்களுக்கு அளித்து விட்டேன்.  7வது பகுதியை இப்போது அளிக்கிறேன். எல்லோரும் பார்த்து ரசிக்ýகும்படி கேட்டுக்கொள்கிறேன். 
இதேபோல் ந பிச்சமூர்த்தியின் 100வது ஆண்டு விழா ஒளிப்படமும் உள்ளது.  ஆனால் அசோகமித்திரனின் ஒளிப்படம்போல் அவ்வளவாய் சிறப்பாக வராத படம் அது.